கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வெளிப்புற கரப்பந்து விளையாட்டு மைதானம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் 19 ஆம் திகதி வியாழகிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் அனைத்து படையினர்களின் விளையாட்டு திறன்களையும் வசதிகளையும் மேம்படுத்துவதன் நோக்கத்துடன் 9 ஆவது இலங்கை பொறியியலாளர் படையணியின் படையினரின் உதவியுடன் அனைத்து படையினரின் ஒத்துழைப்பில் நிர்மானிக்கப்பட்டது. புதிய கரப்பந்து மைதானத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நான்கு விளையாட்டு அணிகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனைகளினால் கரப்பந்து விளையாட்டுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை பிரிகேடியர் அஜித் திசாநாயக, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக மற்றும் விடுதி பிரிகேடியர் தீபல் ஹதுருசிங்க உட்பட சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.