Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2020 10:45:20 Hours

இதுவரை 269,483 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படதென கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (22) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 12 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்து வெள்ளவத்தை தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், இந்தியாவில் இருந்து வருகை தந்து ஹொட்டல் பயர்வே சன்செட் ஹெட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் இருவரும், மாலைத்தீவில் இருந்து வருகை தந்து தம்மின்ன மற்றும் பிடிபான தனிமைபடுத்தல் மையங்களில் 8 பேர், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்து தங்காலை சூர்ய ரீசோட் ஹெட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (22) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 649 ஆகும்.

அபுதாபியில் இருந்து EY 294 விமான மூலம் 290 பயணிகள் இலங்கை வந்துள்ளதுடன், இந்தியாவில் இருந்து UL 1160 விமானம் மூலம் பயணிகள் இன்று பிற்பகல் கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் (22) பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 18 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் ஹோட்டல் ஜெட்வின் புளு 03 பேர், பீகோன் பீச் ஹோட்டல் 01 நிபுன பூஸ்ஸ தனிமைபடுத்தல் நிலையத்தில் 11 பேர் மற்றும் கல்பிட்டிய ருவல தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேபோல், இன்று 22 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் , 43849 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 6626 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (21) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1470 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 269483.ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 12 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (22) அதிகாலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறினர். அவர்களில் 04 நபர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் மீதமுள்ள 08 பேர் கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள்.

இன்று (22) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமைகளுக்கான சேனாபுரா சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 646 ஆக உள்ளது. அவர்களில், பாதிக்கப்பட்ட 03 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர சமூகத்திலிருந்து வேறு எந்த கொரோனா தொற்று சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்து அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) affiliate tracking url | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ