Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2020 14:08:26 Hours

தளபதியினால் விணியோக கட்டளையின் பட்டறை நிகழ்வில் பங்களிப்பு

இராணுவ விணியோக கட்டளையின் பல்வேறு சேவை ரெஜிமென்ட்களில் 2 வது கட்டளையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஒரு பட்டறையில் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் புதன்கிழமை (16) ஆம் திகதி உரையாற்றினார். குறித்த நிகழ்வானது விணியோக கட்டளை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இராணுவம் போன்ற ஒரு பெரிய அமைப்பில் தளவாடங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செயல்பாட்டு அம்சங்கள் குறித்து லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதுடன், அமைப்பின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகள் அதிகாரிகள், போர்கருவி சேவை படையணி பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க, நலன்புரி பணிப்பாளர் பிரிகேடியர் சனத் அலுவிஹாரே, போர்கருவி பணிப்பாளரும்,வரவு செலவு மற்றும் நிதி பணிப்பாளருமான பிரிகேடியர் சானகமேத்தானந்த மற்றும்சட்ட அலுவலக பணிப்பகத்தின் கேணல் சட்ட அதிகாரி கேணல் என் நல்லபெரும ஆகியோர் குறித்த பட்டறையின் போது சட்ட விவகாரங்கள் முறையே கட்டளை நடைமுறைகள், நலன்புரி நடைமுறைகள், கட்டளை, கடன் நடைமுறைகள் மற்றும் வட்டி மற்றும் இராணுவ சட்டத்தின் முக்கியத்துவத்தின் கணக்கீடுகள் மற்றும் விசாரணை நீதிமன்றத்திற்கான முன்நிபந்தனைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வானது இராணுவ விணியோக்க் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களின் ஆலோசனைக்கமைவாக ஆரம்பிக்கப்பட்டது. Running Sneakers Store | Nike Shoes