Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2020 14:00:26 Hours

க. பொ.த (சா/தர) மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிக்காட்டல் செயலமர்வு பூநரியில்

66வது படைப்பிரிவின் 661 வது பிரிகேட்டின் 5 வது இயந்திரவியல் காலாட்படையின் படையினரால் பூநகரி பிரதேசத்தின் எதிர்வரும் க பொ.த (சா/தர) பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிக்காட்டல் செயலமர்வு ஒன்றை செவ்வாய்க்கிழமை (08) பூநரின் மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செயலமர்வு 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 661 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாந்த ஹெவகே அவர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்ட செயலமர்வில் 31 மாணவர்கள் பயன்பெற்றனர்.

இச் செயலமர்வின் வளவாளர்களாக திருமதி கில்பர்ட் வான்சலின் (பயிற்சி வழங்கலுக்கான டிப்ளோமாதாரி), திருமதி எஸ். சாந்தகலா (ஆலோசணை வழிக்காட்டல் டிப்ளோமா) செல்வி ஆர். கேதுஜா (பட்டதாரி) ஆகியோர் பங்களித்தனர். நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பாளராக கிளிநொச்சி மாவட்ட தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னாள் அலுவலகர் திரு. மேகிபன் செயற்பட்டார்.

செயலமர்வின் முடிவில், மாணவர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் இராணுவத்திற்கு தனது நன்றியினை தெரிவித்தனர். கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. Asics shoes | 『アディダス』に分類された記事一覧