Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2020 07:00:24 Hours

இதுவரைக்கும் தனிமைப்படுத்தலிலிருந்த 38,863 நபர்கள் வெளியேறியுள்ளனர் கோவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (09) ஆம் திகதி அறிக்கையின் படி 17 நபர்களுக்கு கோவிட் – 19 தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்த 9 பேருக்கும், குவைட்டிலிருந்து வருகை தந்த மூவருக்கும், கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த ஐவரும் பெரியகாடு, பெல்வெஹேர , விடதபள்ளி தனிமைப்படுத்தல் மையங்களிலிருக்கும் சமயத்தில் இணங்காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் – 19 மையம் தெரிவித்தது.

இன்றைய காலை 6.00 மணி அறிக்கையின் படி கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய நபர்களது முழு விபரம் 640 ஆகும். இவர்களில் 519 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளும், 67 ஊழியர்களும், 5 விருந்தினர்களும்,வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 48 குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புடை ஒருவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

சவூதி அரேபியாவிலிருந்து UL 282 விமானத்தின் மூலம் 238 பயணிகளும், டுபாயிலிருந்து EK 648 விமானத்தின் மூலம் 09 பயணிகளும், டோகார் கட்டாரிலிருந்து QR 668 விமானத்தில் 28 பயணிகளும், இந்தியாவிலிருந்து 6E 9034 விமானத்தில் 29 பயணிகளும், சென்னையிலிருந்து 6E 9901 விமானத்தின் மூலம் 44 பயணிகளும் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று 136 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டொல்பின் ஹோட்டலிலிருந்து 07 பேரும், நீர்கொழும்பு கெமிலெட்டிலிருந்து 29 பேரும், நீர்கொழும்பு காயாவிலிருந்து 13 பேரும், இராஜகிரிய ஆயுர்வேத நிலையத்திலிருந்த 02 பேரும், பூனானையிலிருந்து 65 பேரும், நுரைச்சோலையிலிருந்து 04 பேரும், பூசா நிபுனையிலிருந்து 07 பேரும், கேகித்தையிலிருந்து 09 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 38,863 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 6,176 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1560 ஆகும். இது வரைக்கும் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனைகளின் மொத்த எண்ணிக்கை 242,984 ஆகும். .

இன்று கொரோனா தொற்று நோய்க்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 09 நபர்கள் பூரன குணமாகி வெளியேறியுள்ளனர். அத்துடன் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகிய 634 நபர்கள் சிகிச்சையின் பின்பு குணமாகியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ள 15 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) bridgemedia | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers