Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2020 08:02:20 Hours

யாழ் படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

யாழ் பிரதேச மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் இராணுவத்தினரால் யாழ் குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் நிர்மானித்து கொடுக்கும் வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் வேண்டுகோளுக்கமைய பரபோகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் இராணுவத்தினரால் புங்குடுதீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு திங்களன்று (31) ஆம் திகதி திருமதி தவராசா கவீதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கையளிக்கப்பட்டன.

யாழ் நன்கொடையாளரான திரு வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் இராணுவத்தினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம், அர்ப்பணிப்புள்ள பணிகள் மற்றும் இராணுவத்தினரின் ஆள் வலிமையை கருத்திற் கொண்டு, ஒரு சமூக சேவையாக தனது செலவில் இந்த வீடு நிர்மான பணிகளுக்காக மூலப்பொருட்களை வழங்கினார்.

அதற்கமைய இந்த பணியானது 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, 512 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எரந்த ரத்நாயக்க அவர்களின் ஒருங்கிணைப்பில் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் 512 ஆவது படைப் பிரிவில் சேவையாற்றும் 17 கெமுனு ஹேவா படையினரால் நன்கொடையாளரின் சிறந்த திருப்திக்காக சில வாரங்களுக்குள் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார, அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் நன்கொடையாளர் திரு வாமதேவா தியாகேந்திரன் ஆகியோருடன் இணைந்து இந்து சம்பிரதாய முறைப்படி அனைவரின் கைதட்டல்களுக்கு மத்தியில் ரிபன்வெட்டி புதிய வீட்டை திறந்துவைத்தார். 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி 512 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, அதிகாரிகள், கட்டட அமைப்பாளர்கள், குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் யாழ் குடா நாட்டின் வருமை கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய குடும்பங்களுக்கு இராணுவத் படையினரால் நிர்மானிக்கப்பட்ட வீடுகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. best Running shoes brand | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov