24th August 2020 12:23:40 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது காலாட் படைப் பிரிவின் 593 ஆவது காலாட் பிரிகேட் படையணியின் படையினரால் நாயாறுதொடக்கம் செம்மலை வரையான கரையோரப் பகுதிகளில் சனிக்கிழமை 22 ஆம் திகதி சிரமதானப் பணிகள் முன்னேடுக்கப்பட்டன.
இத்திட்டமானது 593 ஆவது காலாட் பிரிகேட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த பலமகும்புர அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் ‘எமது எதிர்காலத்திற்காக சூழலை பாதுகாப்போம்’ என்ற தொணிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 19 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 ஆவது (தொண்) இலங்கை சிங்க படையணி உள்ளிட்ட படையணிகளை சேர்ந்த 100 இற்கும் அதிகமான படையினர் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்கு நாயாறு மற்றும் செம்மலை பிரதேச மக்களும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர். jordan release date | UK Trainer News & Releases