Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2020 11:17:35 Hours

இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

இந்தியாவிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்து 47 வயதான பெண்மணி (22) ஆம் திகதி நள்ளிரவு காலமானார். இவர் நீண்ட காலம் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கோவிட் – 19 மைய அறிக்கை தெரிவித்தது.

இன்று (23) ஆம் திகதி கோவிட் – 19 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 6 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டனர். அராபியிலிருந்து வந்த முல்லைத்தீவு விமானப்படை மையத்திலிருந்து ஒருவருக்கும், குவைட்டிலிருந்து வருகை தந்து எகோ சவாரி மையத்திலிருந்த இருவருக்கும், ஜிஎஸ்எச் கொழும்பு மையத்திலிருந்து ஒருவரும் , அமெரிக்காவிலிருந்து வருகை தந்து ராஜகிரிய மையத்திலிருந்த ஒருவருக்கும் , இந்தியாவிலிருந்து வருகை தந்து வஸ்கடுவ மையத்திலிருந்த இருவருக்கும் கொரோனா தொற்று நோய் இருப்பதாக பரிசீலனையின் மூலம் இணங்காணப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிக்கையின் பிரகாரம் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களின் முழு விபரம் 629 பேர் இவர்களில் 508 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள், 67 பேர் நிர்வாக உறுப்பினர்கள், 5 பேர் விருந்தின அங்கத்தவர்கள், வெலிக்கடை 48 பேருடன் தொடர்புடைய ஒருவர் என்று பேர் குடும்ப அங்கத்தவர்கள் கோவிட் மையம் தெரிவித்தது.

இன்று காலை UL 1710 விமானத்தின் மூலம் நைரோபியிலிருந்து 110 பயணிகளும், EK 648 டுபாய் விமானத்தின் மூலம் 31 பயணிகளும், QR 668 விமானத்தின் மூலம் டோஹாவிலிருந்து 19 பயணிகளும், 6E 9034 விமானத்தின் மூலம் சென்னையிலிருந்து 14 பயணிகளும், UL 606 விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து 238 பயணிகளும் வருகை தந்துள்ளனர்கள். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்று காலை (23) நிலவரப்படி 110 பயணிகளுடன் நைரோபியில் இருந்து யுஎல் 1710, 31 பயணிகளுடன் துபாயில் இருந்து விமானம் இ.கே 648, தோஹாவிலிருந்து விமானம் கியூஆர் 668, கத்தார் 19 பயணிகளுடன், விமானம் 6 இ 9034 சென்னையிலிருந்து 14 பயணிகளுடன் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 238 பயணிகளுடன் யுஎல் 606 விமானம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது, அவர்கள் அனைவருமே மூன்று சேவைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு 161 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இவர்களில் பியகம விளேஜிலிருந்து இருவரும், கல்கிஸ்சையிலிருந்து இருவரும், தியதலாவையிலிருந்து 89 பேரும், பியகம விளையாட்டு தொகுதியிலிருந்து 10 பேரும், ஜெட்விங் பீச் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் தனிமைப்படுத்தலின் பின்பு 31,173 பேர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 7304 பேர் முப்படையினரால் நிருவாகித்து வரும் 52 தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கை 1710 ஆகும். முழுமையாக நாடு முழுவதும் இது வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 202,907 ஆகும்.

இன்று 23 ஆம் திகதி கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 09 ஆகும். கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 597 நபர்கள் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் மேலும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 32 பேர் ஆவர். (நிறைவு) Mysneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers