18th August 2020 16:53:41 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் இம் மாதம் (16) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
64 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 641, 642 மற்றும் 643 ஆவது படைத் தலைமையகளுக்குரிய 23 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 17 (தொ) கஜபா படையணி, 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டன. Running sport media | Air Jordan