Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2020 13:27:08 Hours

கெட்டபரு தேவாலயத்தில் கொரோனா ஒழிப்பிற்கான ஆசிர்வாத சிறப்பு பூஜைகள்

தெனியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கெடபரு தேவாலய ரஜமஹா விகாரையில் இம் மாதம் (18) ஆம் திகதி கொரோனா ஒழிப்பிற்கான ஆசிர்வாத சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜையில் கோவிட் -19 தடுப்பிற்காக பாரிய பங்காற்றிய பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

இந்த சிறப்பு பூஜையானது மதிப்புக்குரிய கிரிந்த ஆனந்த தேரரது தலைமையில் மல்லிகைப்பூக்களுடன் இந்த பூஜைகள் இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றன. இதன் போது கோவிட் – 19 க்காக பாரிய பங்காற்றிய பாதுகாப்பு படையினர்களுக்கு ஆசிர்வாதமளிக்கும் முகமாக இந்த வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் இந்த பூஜையின் இறுதியில் இராணுவ தளபதி அவர்கள் இந்த கொரோனா தொற்று நோய் ஒழிப்பிற்கு பாரிய பங்காற்றிய சுகாதார அதிகாரிகள், முப்படையினர், பொது சுகாதார ஆய்வாளர்கள் அனைவருக்கும் இறைவனது சக்தியும், ஆசிர்வாதமும் கிடைக்கப் பெறவேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.

இராணுவ தளபதி அவர்கள் கெட்டபரு தேவாலய வளாகத்திற்கு செல்வதற்கு முன்னர் ரஜமஹா விகாரையின் பிரதான புத்த பெருமானின் சன்னதிக்கு சென்று கொரோனா தொற்று நோயிலிருந்து நாடை விடுவிப்பதற்கான சக்தியும் ஆசிர்வாதமும் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப் பெற வேண்டும் என்று ஆசிர்வாத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்த விஷேட பூஜையின் இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் மகா சங்க இந்த பூஜையில் கலந்து கொண்ட தேரர்கள் அனைவருக்கும் சமய சம்பிரதாயத்தின் படி ‘பிரிகர’ பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Nike