18th August 2020 16:25:41 Hours
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கு இம் மாதம் (15) ஆம் திகதி பிரியாவிடை மற்றும் கௌரவளிப்பு நிகழ்வுகள் சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.
முதலில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் சிங்கப் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக அவர்கள் அம்பேபுஸ்சை தலைமையகத்திற்கு வருகை தந்தார். இவரை தலைமையக நுழைவாயிலில் வைத்து பிரதி மத்திய கட்டளைத் தளபதியான கேர்ணல் துலித் பெரேரா அவர்கள் வரவேற்றார். பின்பு தலைமையக மைதானத்தில் வைத்து சிங்கப் படையணியின் மத்திய கட்டளைத் தளபதியான பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்கள் படைத் தளபதியை வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தினுள் சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக நினைவஞ்சலியை செலுத்தினார்.
அத்துடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் மற்றைய அதிகாரியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களுக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் இந்த மூத்த அதிகாரி தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்காக அஞ்சலியை செலுத்தினார்.
பின்பு இந்த மூத்த அதிகாரிகள் இருவரும் தலைமையகத்திலுள்ள சாஜன் விடுதிக்கு சென்று அங்கு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டு படையினருடன் உரையாடலையும் மேற்கொண்டனர்.
மேலும் அன்றிரவு சிங்கப் படையணி தலைமையக அதிகாரி விடுதியில் இந்த மூத்த அதிகாரிகளின் சேவையை பாராட்டும் முகமாக இரவு விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் இந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வுகள் கோவிட் – 19 தொற்று மற்றும் சுகாதார வழிக்காட்டுதல்களுக்கு கீழ் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.trace affiliate link | Footwear