Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2020 07:06:19 Hours

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தி வாசிப்பிற்கு இராணுவ தளபதியின் பாராட்டு

இராணுவ தலைமையக வளாகத்தினுள் செய்தி முன்வைப்பானது இராணுவ தலைமையகத்தின் ஊடக பணிப்பகத்தினால் இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் இராணுவ தகவல்கள், பத்திரிகை விடயங்கள் உள்ளடக்கப்பட்ட செய்திகள் முன் வைக்கப்பட்டன.

ஊடக பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களது கருத்திட்டத்தின் கீழ் செய்தி – வாசிப்பு, பேச்சு நிகழ்ச்சிகளை நடுநிலைப்படுத்துதல், திருத்தம் மற்றும் அறிவிப்பு திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த செய்தி முன்வைக்கப்பட்டன.

இந்த செய்தி கண்ணோட்டத்திற்கு பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது மனமார்ந்த் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்

இந்த செய்தி கண்ணோட்டம் கிழமையில் விடுமுறையற்ற ஐந்து நாட்களும் மதியம் 1.00 மணிக்கு இராணுவ தலைமையக வளாகத்தினுள் இராணுவ அம்சங்கள், நட்பு விவகாரங்கள், சர்வதேச செய்திகள், கல்வி உள்ளீடுகள் மற்றும் விளையாட்டுகள் உள்ளடக்கப்பட்ட செய்திகளுடன் இராணுவ ஊடக பணியகத்தின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 1 ஏஏஎன்பி அமரசிங்க மற்றும் கோப்ரல் எச்ஏபீஏ சதுரானி போன்றோரால் இந்த செய்திகள் முன் வைக்கப்பட்டன.

இந்த செய்தி கண்ணோட்ட ஆரம்ப நிகழ்வில் ஊடக பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ