Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2020 11:13:17 Hours

மீட்கப்பட்ட நான்கு நபர்கள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றம் கோவிட் மையம் தெரிவிப்பு

ஓமானிலிருந்து திரும்பி வந்து வெள்ளவத்தை ஒசோ ஹோட்டலில் தங்கியிருந்த மூவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக இன்று (17) ஆம் திகதி அறிக்கை மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 629 ஆக உள்ளது. அவர்களில் 508 நபர்கள் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் , 67 நபர்கள் அலுவலக அங்கத்தவர்கள், விருந்தாளி நபர்கள் ஐவர், 48 குடும்ப அங்கத்தவர்கள் உள்ளடங்குவார்கள் என கோவிட் – 19 மையம் இன்றைய அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.

டோகாவிலிருந்து QR 668, 29 விமானம் மூலம் வருகை தந்த 36 பயணிகளும், சென்னையிலிருந்து 66E 9103 விமானம் மூலம் வருகை தந்த 29 பயணிகளும், நரிட்டா UL 455 விமானம் மூலம் 3 பயணிகளுடன் கொழும்பிற்கு வருகை தந்த பயணிகள் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று (17) ஆம் திகதி நிலவரப்படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 307 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் 85 பேர் போகொட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும், 90 பேர் 59 ஆவது படைப் பிரிவிலும், 120 பேர் பெரியகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும், 6 பேர் நிபுன பூசா மையத்திலும், 6 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுவரைக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 30,585 தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். 5,333 பேர் முப்படையினரால் நிர்வகித்து வரும் 46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம் மாதம் (16) ஆம் திகதி 1,080 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 185,118 ஆகும்.

அத்துடன் இன்று (17) ஆம் திகதி அதிகாலை கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 04 பேர் குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர். இவர்களில் இருவர் உள்நாட்டைச் சேர்ந்தவர்களும், மற்றைய இருவர் இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் ஆவார். அத்துடன் கந்தகாடு மையத்தில் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 484 நபர்கள் இந்த மையத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 145 நபர்கள் இன்னும் சிகிச்சையினை பெற்று வருகின்றனர். (நிறைவு) Nike sneakers | Nike News