Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 12:17:33 Hours

தியதலாவை இராணுவ தொண்டர் பயிற்சி பாடசாலையில் இராணுவத்தினருக்கு விரிவுரை

தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ தொண்டர் பயிற்சி பாடசாலையில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உட்பட 125 பேருக்கு 'வாழ்க்கையில் அணுகுமுறைகள் மற்றும் சவால்கள்' எனும் தலைப்பில் விரிவுரைகள் இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த விரிவுரைகள் லெப்டினன்ட் கேர்ணல் சமந்தி பண்டார அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரைகள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய தியதலாவ இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி முகாமின் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் மன நலனை மேம் படுத்தும் நோக்கத்துடன் உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நலன்புரித் திட்டமானது இராணுவ தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கை பணிப்பகம் மற்றும் பயிற்சி பணிப்பகத்தினரின் ஏற்பாட்டில் வாழ்க்கையில் சவால்கள் மற்றும் சிக்கல்கள்களுக்கு எவ்வாறு முகமளிப்பது தொடர்பாக தெளிவூட்டப்பட்டன.

இந்த விரிவுரைகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய விரிவுரையின் போது பல்வேறுபட்ட கேள்வி பதில்கள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth