Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th August 2020 19:48:06 Hours

இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழில் இந்திய அமைதிகாக்கும் படைவீரர்களுக்கு நினைவஞ்சலி

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,இந்திய அமைதி காக்கும் படையில் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வானது,பாலாலியில் உள்ள இராணுவ நினைவுத் தூபியில் சனிக்கிழமை 15 ஆம் திகதி இடம் பெற்றது.

இலங்கையில் 1987 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற இலங்கையின் கொடூரமான எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத போரின் போது,ஒபரேஷன் பவன்’ மற்றும் பிற நடவடிக்கைகளில் பங்கேற்ற இந்திய அமைதி காக்கும் படை வீரர்கள் தங்களது உயிர்களை தியகம் செய்தனர்.

யாழ் பாதுகாப்பு படை தலைமையகமானது, யாழ் இந்திய தூதரகத்தின் தூதுவர் திரு எஸ்.பாலசந்திரன் அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. அதற்கமைய பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம்,யாழ் பாதுகாப்பு படைத்தளபதிக்கு பதிலாக யாழ் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்னாண்டோ அவர்கள் அவர்கள்இந்த நிகழ்வில்கலந்து கொண்டார்.

பின்னர், திரு பாலச்சந்திரன் மற்றும் யாழ் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்னாண்டோ அகியோர் மறைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அஞ்சலி செலுத்துவதற்காக மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ அவர்கள் இந்திய தூதுவரை நினைவுச் தூபிக்கு அழைத்துச் சென்றார்.பின்னர், இராணுவ சம்பிரதாய முறைப்படி லாஸ்ட் போஸ்ட் இராணுவ மரியாதை வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், யாழ்பானத்திலுள்ள இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் மற்றும் யாழ் பாதுகாப்பு படையினர் சார்பான ஒரு குழு உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Air Jordan