Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 11:00:18 Hours

வினியோக படைத் தளபதியினால் சுகாதார வசதி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

கொஸ்கமை சாலாவையில் உள்ள வினியோக கட்டளை தலைமையகத்தில் உள்ள வினியோக கட்டளை படையினருடன் இணைந்து பொறியியலாளர் சேவைப் படையணியின் படையினர்களால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டிடத் தொகுதி, 11ஆம் திகதி புதன்கிழமை படையினர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ வினியோக தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த மதொல்ல அவர்களால் வொரண்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்ஸ் உணவகத்தின் பெயர் பலகை திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் இப் புதிய சுகாதார வசதி கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார்.

வருகையின் இறுதியில், அவர் அனைத்து அணிகளுடனும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அவர்களுடன் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். jordan Sneakers | jordan Release Dates