13th August 2020 12:16:33 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொட அவர்கள் 13 ஆம் திகதி வியாழக்கிழமை 9 ஆவது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 4 ஆவது இராணுவப் புலனாய்வு படையணி முகாம்களுக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
இப் படையணிக்கு வருகை தந்த படைத் தளபதியை 9 ஆவது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.பி ஜயசாந்த அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் நுழைவாயிற் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்டளை அதிகாரியிடமிருந்து பட்டாலியனின் வகிபாகம் மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர், அவர் முகாமைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், மேலும் கொக்காவில் உள்ள பல நடவடிக்கை பரிமாற்றக் கோபுரத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் 4 ஆவது இராணுவப் புலனாய்வு படையணிக்கு வருகை தந்த அவரை குறித்த படையணியின் கட்டளை வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து கட்டளை அதிகாரியால் பட்டாலியனால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கை மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்பாக விளக்மளிக்கப்பட்டது. கடைசியாக, அவர் முகாம் வளாகத்தையும் சுற்றி பார்வையிட்டார்.
படையினர் மத்தியில் உரை நிகழ்த்திய அவர், அர்ப்பணிப்புடன் நியமிக்கப்பட்ட கடமைகளின் முக்கியத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் நிலையான பயிற்சி மூலம் அவர்களின் தொழில்முறை திறன்களின் மேம்பாடு தொடர்பாகவும் விரிவுரைத்தார்.
வருகையின் அடையாளமாக அவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றையும் நட்டுவைத்ததுடன் அதிதிகள் புத்தகத்தில் கையெழுத்திட்டார். url clone | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth