15th August 2020 13:16:06 Hours
இராணுவ தலைமையகத்தின் பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி தம்புள்ள ஹல்மில்லாவெவ பகுதியில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானியை பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர, அவர்கள் வரவேற்றார். பின்பு பதவிநிலை பிரதானிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தலைமையகத்தின் பொது நிருவாக பிரதானி, உயரதிகாரிகள் மற்றும், பணிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.
பின்னர் பதவிநிலை பிரதானியின் தலைமையில் நிருவாக விடயங்கள் தொடர்பான பரிசீலனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தலைமையக பிரதான பணிமனைகளில் இடம்பெற்றன.
இச்சந்தர்ப்பத்தில் பொறிமுறை காலாட் படையணியின் பிரிக்கட் தளபதி பிரிகேடியர் பிரியதர்ஷன, மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் குமார வனசிங்க போன்றோர் இணைந்திருந்தனர்.
இறுதியில் பதவிநிலை பிரதானியின் வருகையை கௌரவித்து பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி அவர்களினால் நினைவு பரிசொன்றை பதவிநிலை பிரதானிக்கு வழங்கி வைத்தார். பின்பு பதவி நிலை பிரதானியினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். Buy Kicks | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp