Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2020 12:40:20 Hours

65 ஆவது படைப்பிரிவில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

துனுக்காயில் அமைந்துள்ள 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் இலங்கை மின்சார பொறிமுறை இயந்திர படையணி பிரிவில் அனைத்து படையினர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ போக்குவரத்து யார்ட், ‘தேநீர் கடை’ ஆகியன, 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி நுழைவாயில் வைத்து உத்தியோகபூர்வமாக நினைவு பலகையை திறந்துவைத்தார். அத்துடன் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார். புதிய எம்டி முற்றத்தில் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் அனைத்து வாகனங்களையும் நிறுத்திவைப்பதற்கான தகைமையினை கொண்டிருப்பதுடன், அதற்கமைய ‘தேநீர் கடை’ மற்றும் புதிய வேறு கட்டுமானங்களையும் திறந்து வைத்த அவர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

இந்த பணிகள் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் உள்ளூர் வளங்கள் மூலம் கிடைத்தன, அதே நேரத்தில் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்களினால் மனிதவளரீதியக பங்களிப்பு வழங்கப்பட்டது. 65 பாதுகாப்பு படைப் பிரிவின் இலங்கை மின்சார பொறிமுறை இயந்திர படையணி கள பயிற்சி பட்டறையானது தொடர்ந்து முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்வதில் அவர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.

இந்த திறப்பு விழாவில் 65ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ஏனைய படையினர் உடபட பலர் கலந்து கொண்டனர். jordan release date | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth