Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2020 13:19:53 Hours

'மாவில் ஆறு' மீள் திறப்பின் 14 ஆவது ஆண்டு நிறைவு

30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்டிடிஈ பயங்கரவாதத்தினால் நாட்டில் நிலவிய கொடிய யுத்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து முழு நாட்டையும் விடுவிப்பதில் திருப்புமுனை தினமாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி குறிக்கின்றது.

சமாதான போர் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் முகமாக புகழ் பெற்ற மாவிலாறு அனைக் கட்டை எல்டிடிஈ பயங்கரவாதியினர் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி தங்களது சுயநலத்திற்காக மூடினர். இந்த அனைக்கட்டு மூலம் 35,000 குடும்பத்தினர் நீரின்றி அவஸ்த்தை பட்டனர். அத்துடன் 30,000 ஏக்கர் விவசாய நிலப்பரப்புகள் நீரின்றி வாடிய நிலையில் காணப்பட்டன.

இந்த நிலையை தனிக்கும் முகமாக இலங்கை இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டு இராணுவத்தினர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி காலை 08.00 மணிக்கு இந்த மாவிலாறு அனைக்கட்டு பகுதியை கைப்பற்றினர்.

எல்டிடிஈ பயங்கரவாதிகள் இந்த அனைக்கட்டு வாயிலை மூடியமையினால் விவசாயிகள், கிராம மக்கள் நீர்வசதியின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகமளிப்பதை அவதானித்த பாதுகாப்பு படையினர் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்டிடிஈ பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றி கொண்டனர்.

பாதுகாப்பு படையினரது இந்த செயற்பாடுகள் மூலம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தற்போது விவசாயங்களை புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

எல்டிடிஈ பயங்கரவாதியினர் மூதூர் பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு பாதுகாப்பு படையினர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த தாக்குதலுக்கு முகமளித்து பாதுகாப்பு படையினர் இந்த பிரதேசங்கள் மற்றும் மாவிலாறு அனைக்கட்டையையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK