Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2020 14:46:29 Hours

புகழ்பெற்ற இராணுவ உயரதிகாரி, லெப்டினென்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் போர்வீரர்களின் 28 ஆவது நினைவு தினம்

நமது வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மிகச்சிறந்த போர் வீரர்களில் ஒருவரான காலஞ்சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ அவர்களின் 28 ஆவது சிரார்த்தத் தினம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆகும். 1992 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி எல்ரிரிஈ பயங்கரவாதிகள் யாழ் குடாநாட்டின் அராலியில் வாகன தொடரணிக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் பல இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

1992 ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஈழப் போரின் போது இலங்கை இராணுவத்திற்கு தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, தற்போதைய இராணுவத் தளபதியை உருவாக்கிய மதிப்புமிக்க கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மோஹான் ஜயமஹ, லெப்டினன்ட் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச். அரியரத்ன, லெப்டினன்ட் கேணல் வைஎன். பலிபான, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நலின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சிபி விஜேபுர சிப்பாய் டபிள்யூஜே விக்ரமசிங்க ஆகியோர் யாழ் ஊர்காவற்துறை அராலி பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர்.

புகழ்பெற்ற திரித்துவ கல்லூரியின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள் 1960 மே மாதம் 25 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்தார். இராணுவ பயிற்சி மையத்தில் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்ததன் பின்னர் மேலதிக பயிற்சியினை இங்கிலாந்து சண்ட்ஹர்ஸ் ரோயல் மிலிட்டரி அகடமியில் பெற்றுக் கொண்டு 1962 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் இரண்டாம் லெப்டின்னாக நியமிக்கப்பட்டார். இவரின் அனுராதபுர நகரில் உள்ள சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று 8 ஆம் திகதி நடைபெற்றது.Best Authentic Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ