Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2020 16:00:59 Hours

‘லயா சவாரி’ சுற்றுலா ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விருது

லயா சவாரி’ சுற்றுலா ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான ‘ட்ரேவலர்ஷ் சொயிஷ்’ விருது கிடைக்கப் பெற்றது. அத்துடன் சிறந்த உலகளாவிய ஹோட்டல்களில் 10 சதவீதத்தில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் நிமித்தம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த நிலையில் இராணுவம் – சிவில் ஒன்றினைந்து மேற்கொள்ளும் லயா சவாரி சுற்றுலா ஹோட்டலானது வாடிக்கையாளர்களது பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் நிமித்தம் இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

சுற்றுலா ஆலோசனை நிமித்தம் உலகெங்கிலும் உள்ள பயணிகளிடமிருந்து ஒரே ஆண்டில் சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இந்த விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சுற்றுலா ஹோட்டலானது தரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த சுற்றுலா ஹோட்டலானது சிறந்த பயனுள்ள மதிப்புரைகளை பெறும் வணிகங்களை அங்கீகரித்துள்ளது. அத்துடன் லயா சபாரியானது அதன் பரந்த கடல்சார் அமைப்புகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவையில் ‘பயண ஆலோசகர்’ அனுபவத்தையும் பெற்றுள்ளது.

இந்த விருது கிடைக்கப்பட்டதையிட்டு பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நிர்வாக சபை மற்றும் ஊழியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் எங்கள் தரநிலைகளை நிலை நிறுத்துவதற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வழிகளில் ஈடு செய்ய வேண்டிய தற்போதைய நவீன மற்றும் பராமரிப்பு சிக்கல்களுடன் இது எளிதான சாதனையல்ல ஆனால் இந்த விருதானது எம்மை ஊக்குவிக்கின்றது என்று இந்த ஹோட்டலின் பொது முகாமையாளர் கேர்ணல் லலித் ஹேவகே அவர்கள் தெரிவித்தார்.

ட்ரெவலர்ஷ் சொயிஷ் 2020 ஆம் ஆண்டிற்கான விருதிற்கான சுற்றுலா ஆலோசனைக்கான ஆவணங்கள் கீழ்வருமாறு affiliate tracking url | Sneakers