Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2020 17:43:59 Hours

இராணுவத்தினரால் பாடசாலைகளில் கட்டிட அபிவிருத்தி பணிகள்

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி, 9 ஆவது சிங்கப் படையணி மற்றும் 18 ஆவது கெமுனு காலாட் படையணின் பங்களிப்புடன் கடந்த சில தினங்களில் பல்வேறுபட்ட பாடசாலை மற்றும் பிற இடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அன்மையில் இப்பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட போது அப்பிரதேசத்தின் மக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானம், பார்வையாளர் கூடம் அமைத்து தரும்படி விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த பாடசாலை அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவத் திறன் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இராணுவ தளபதிக்கு இந்த பாடசாலை அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு விடுத்தார். தனமல்வில தேசிய கல்லூரியின் கேட்போர் கூடம் 10 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியினர் 9 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 60 படையினர்களது பங்களிப்புடன் மீள்கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் யாரும் கவனிக்கப்படாத நிலையிலிருந்த 350 மீற்றர் நீள தெமடபந்துர குளமானது 11 ஆவது இராணுவ பொறியியல் படையணியினால் மீள் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் மூலம் 35 ஏக்கர் விவசாயம் புரியும் நிலப்பபரப்பிற்கு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நீர் வழங்கப்பட முடியும்.

மொனராகலை மாதுல்ல மஹா வித்தியாலயத்திற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களின் விஜயத்தின் போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் 121 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 18 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் இராணுவ சேவை பொறியியல் படையணியின் பங்களிப்புடன் இப்பாடசாலையின் மைதானங்கள் மீள்நிர்மானிக்கும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் மாதம் (2) ஆம் திகதி 12 ஆம் படைப் பிரிவிற்கு கீழுள்ள இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் இராணுவ தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய மித்தெனிய கனிஷ்ட வித்தியாலயத்தின் கூரைகள் மீள்நிர்மானிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

11 ஆவது இராணுவ பொறியியல் படையணி மற்றும் 12 ஆவது பொறியியல் படையணியினால் அயகம கலவான வீதி மற்றும் நெலுவ – லங்காகம 150 மீற்றர் தூரமுள்ள வீதிகள் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐந்தாவது இலங்கை பொறியியல் படையணியினரால் கொலவெனிகம மற்றும் லங்காகம வீதிகள் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இம் மாதம் (4) ஆம் திகதி 40 மீற்றர் சாலை இணைப்புகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக 6, 12 மற்றும் 11 ஆவது இராணுவ பொறியியல் படையணியினரால் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய ஹங்குராங்கெத்த, பொரமடுல்ல மத்திய கல்லூரி விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரங்க மேம்பாட்டுத் அபிவிருத்தி திட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலை மைதானத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் இடையில் ப்ளைஓவர் பாலம் அமைக்கப்படும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி தெரனியகல ஶ்ரீ சமன் தேசிய பாடசாலையில் விளையாட்டு மைதானம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இம் மாதம் (4) ஆம் திகதி இந்த அபிவிருத்தி மீள் புணரமைக்கும் பணிகள் நிறைவு செய்து பாடசாலை நிர்வாகத்திடம் இராணுவத்தினர் கையளித்தனர்.

மற்றொரு விசால அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 11 ஆவது இராணுவ பொறியியல் படையணியினரால் தும்மலசூரியவில் அமைந்துள்ள ஜெ.ஆர் ஜயவர்தன மத்திய கல்லூரியில் புதிய விளையாட்டு மைதான கட்டிட நிர்மான பணிகள் 80% இன்று 4 ஆம் திகதி வரை நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | New Releases Nike