01st August 2020 10:07:54 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் 9 ஆவது பொறியியலாளர் படையணி மற்றும் 4 ஆவது தொண்டர் இலங்கை இராணுவ மகளிர் படையணிகளுக்கு 01 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
முதல் தடவையாக 4 ஆவது தொண்டர் இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு வருகை தந்த இப் பாதுகாப்பு படைத் தளபதிக்கு மகளிர் படையணியினரால் நுலைவாயிற் வைத்து கெளரவ வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ்.பி சில்வா அவர்களால் வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றியதுடன், கட்டளை அதிகாரியால் பட்டாலியனின் நிர்வாக, நடவடிக்கை மற்றும் வழங்கல் தொடர்பான விளக்கக்காட்சி நடத்தப்பட்டது. பின்னர், அவர் முகாமைச் சுற்றிப் பார்த்ததுடன் படையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
அடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி 9ஆவது பொறியியலாளர் படைப் பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இப் படைத் தளபதிக்கு விஜயத்தை மேற்கொண்ட இப் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் கெளரவ வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து இப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜி.ஏ.டி அல்விஸ் அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பட்டாலியனின் நிர்வாக, நடவடிக்கை மற்றும் வழங்கல் தொடர்பான விளக்கக்காட்சி கட்டளை அதிகாரியால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக, அவர் முகாம் வளாகத்தை சுற்றிப் பார்த்தார்.
அதனைத் தொடர்ந்து அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் வீரர்களான நாம் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் அவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்திகொள்ளும்மாறு விரிவுரைத்தார்.
வருகையின் அடையாளமாக இவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்றை நட்டுவைத்ததுடன் அதிதிகள் புத்தகத்தில் கையெப்பமிட்டு சென்றார். Mysneakers | Autres