Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2020 12:57:54 Hours

இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயவீர பதவியேற்பு

மேஜர் ஜெனரல் ஜயவீர அவர்கள் இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்திற்கு 12 ஆவது படைத் தளபதியாக 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பனாகொடையில் உள்ள படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் நுலைவாயிற் மரியாதை அணிவகுப்பு வழங்கி வைத்து வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் அனுர திசானாயக அவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தின் படையணி வண்ணங்களுடன் காபரிசன் சின்னம், கந்துல முறையான படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டன.

பின்னர் தனது பணிமனைக்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் மகா சங்கத்தினரின் மத அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தின் நினைவாக தலைமையக வளாகத்தில் மரக்கன்றையும் நட்டுவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மரணித்த போர் வீர்ர்களின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைத்து படையினருடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்ட அவர் அணைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீராவும் தற்போது புத்தலயில் உள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் தளபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Nike