Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2020 16:16:28 Hours

இராணுவத்தினரால் தும்மலசூரியவில் பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இராணுவ பொறியியல் படையணியின் படையினரால் தும்மலசூரியவில் அமைந்துள்ள ஜே.ஆர் ஜயவர்தன மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி பணிகள் இம் மாதம் (28) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

11 ஆவது பொறியியல் படையணியினால் இந்த பாடசாலையின் மைதானம் மற்றும் பார்வையாளர்கூடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 6, 12 ஆவது இலங்கை பொறியியல் படையணியின் படையினரால் ஹங்குராகெத்த பொரமடுல்ல மத்திய கல்லூரி மற்றும் தெரனியகலை ஶ்ரீ சமன் தேசிய பாடசாலை மைதானங்கள் புணரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Nike footwear | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today