Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2020 16:57:16 Hours

1000 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினரால் தென்னஞ் செய்கை

பாதுகாப்பு தலைமைபிரதானியும்இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின்'துரு மிதுரு - நவ ரட்டக் எனும்விவசாய திட்டத்திற்கு இணையாக இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை பணியகத்தினால்மன்னார் மற்றும் வன்னி மாவட்டங்களின் இடையில் ஆண்டியாபுலியாங்குளம் பகுதியில் அமைந்துள்ள புதிய இராணுவ விவசாய பண்ணையில் தென்னை, மா உட்பட வேறு பயன்தரும் மரக் கன்றுகளும் நடப்பட்டன.

விவசாயம் மற்றும் கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் கந்தனாராச்சி அவர்களால் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்னை மற்றும் மாமரக்கன்றுகளை அடையாள பூர்வமாக நட்டிவைத்து ஆண்டியாபுலியாங்குளஅரச புதிய விவசாயபண்ணையைஆரம்பித்துவைத்தார்.

இராணுவத் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம்அதே நாளில் 21 ஆம் திகதி கந்தக்காடு உட்பட ஏனைய இராணுவ விவசாய பண்ணைகளில்50 ஏக்கர் நிலத்தில் மாங் கன்றுகளும் 50 ஏக்கரில் தென்னங் கன்றுகளும் அடுத்து வரும் சில மாதங்களுக்குள் நாட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து இராணுவ பண்ணைகளிலுமாக தென்னை நடுகையை பரப்பளவில் 1000 ஏக்கராக உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினர் தெரிவித்துள்ளது. Running sport media | Air Jordan