Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 22:58:25 Hours

68 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்‌ஷ அவர்கள் 21 ஆம் திகதி திங்கட்கிழமை 681 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள 7 ஆவது கொமுனு ஹேவா மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி 7 ஆவது கொமுனு ஹேவா மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் படைத் தலைமையக வளாகத்தில் மா மற்றும் சந்தன மரக்கன்றுகளை நட்டுவைத்ததுடன், படையினர்களுக்கு உரையாற்றினார். அத்துடன் அவர் முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது பாராட்டுக்களை கையொப்பமிட்டார். jordan release date | New Balance 991 Footwear