Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2020 10:00:20 Hours

சொந்த வீடு அமைப்பது தொடர்பாக விரிவுரை

கொஸ்கம சாலாவிலுள்ள லொஜாஸ்டிக் கட்டளை தலைமையகத்தில் பணி புரியும் படை வீரர்களுக்கு சொந்தமாக வீடமைப்பதற்கு கனவு கண்டு கொண்டிருக்கும் படை வீரர்களுக்கு விரிவுரைகள் இத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இரத்மலானை தெழில் நுட்ப கல்லூரியின் ஆதரவுடன் இடம்பெற்றது.

லொஜாஸ்டிக் கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களது வழிக்காட்டலின் கீழ் இரத்மலானை தொழில் நுட்ப கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரான செல்வி சமந்த மானவடு அவர்கள் இந்த விரிவுரைகளை ஆற்றினார்.

இராணுவத்தில் சேவையாற்றும் ஒருவர் தான் சுயமாக சொந்த வீடு அமைப்பதற்கான பரிந்துரைப்புகள் உள்ளடக்கிய விடயங்களை அறிவூட்டுவதற்காக இந்த விரிவுரைகள் இடம்பெற்றன. இந்த செயலமர்வில் இராணுவ தொண்டர் படையணி மற்றும் லொஜஸ்டிக் படையணி தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க வியடமாகும். Sports brands | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp