Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2020 19:00:36 Hours

51 ஆவது படைப் பிரிவின் படையினரால் யாழ் பாடசாலைகளில் தொற்று நீக்கி ஒழிக்கும் பணிகள்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் யாழ் குடா நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதன் நிமித்தம், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் வழிக்காட்டலின் பிரகாரம், 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களின் மேற் பார்வையின் கீழ் , 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால், பாடசாலைகளில் 2020 ஜூன் 27 முதல் 30 ஆம் திகதி வரைதொற்று நீக்கி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய கொவிட்-19 வைரஸ் மற்றும் பிற தொற்று நோயிலிருந்து பாதுகாக்க ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சூழலுக்கு மாணவர்களுக்கு உதவுவதற்கான குறிக்கோளுடன் படையினரால் யாழ் குடா நாட்டில் சுன்னாகம், இனுவில், உடுவில், கோப்பாய், தாவடி, உஜரபுரம், உரும்பிராய், வேலனை, ஊர்காவல்துறை, அரியாலை, அரலி, வட்டுக்கோட்டை, சங்கராதய், மல்லாகம், அளவெட்டி, பன்னலாய், மாவிட்டபுரம்,சந்திலிப்பே, தாய்யடி, கங்கேசந்துரை, பாலை, குரும்பசிட்டி, வாசவிலன்,மையிலிடி, வலலை,இருபலை, கரம்பன், தெல்லிப்பலை, வீமங்கமம், வரதவிலன், ஒட்டகப்புளம் மற்றும் ஊரானி ஆகிய பகுதிகளில் இப் பணிகளை மேற் கொண்டனர். Sports brands | Nike SB