Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2020 18:37:36 Hours

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தன அவர்களுக்கு கெமுனு ஹேவா படையணியினர் வாழ்த்து

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.டி.ஏ தேசபிரிய குணவர்தன அவர்கள் காலாட்படை பணிப்பகத்தில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு குருவிட்டயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பிரியா விடை வழங்கி கெளரவிக்கும் நிகழ்வானது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.

இப் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதம அதிதியை கெமுனு ஹேவா படையணியின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் ஏ.ஏ.டி.டி.என்.எஸ். பி துனுவில அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, படையினரால் நுழைவாயில் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

பின்னர், கெமுனு ஹேவா படையணியில் மரணித்த படை வீரர் நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து படையணியின் தலைமையகத்தில் உள்ள பெரடைஸ் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு அவர் இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பின்னர் அனைத்து அணிகளும் கெமுனு ஹேவா படையணிக்கு அவராற்றிய அர்ப்பணிப்புக்கு தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை உண்டா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அதற்கமைய மாலை வேளையில் இரவு உணவு விருந்தும் வழங்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் உணவகத்திற்கு வருகை தந்த பிரதம அதிதிக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.எஸ். பங்சஜய, அவர்கள் மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தன அவர்களின் சேவைகளுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து படையணியின் அனைத்து அதிகாரிகள் சார்பாக பிரியாவிடை உரை நிகழ்த்தினர்.

ஓய்வுபெற்ற செல்லும் மேஜர் ஜெனரல் குணவர்தன அவர்களின் அர்ப்பணிப்பு, சேவைகளைப் பாராட்டி ஒரு சிறப்பு நினைவு பரிசு படையணியின் படைத் தளபதியால் வழங்கப்பட்டது. அத்துடன், பிரதம அதிதி அவர்கள் இராணுவம் மற்றும் கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் தனது கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வானது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. Sneakers Store | Nike SB