Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2020 05:44:59 Hours

எவரும் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை-நொப்கோ தெரிவிப்பு

மடகஸ்கரில் இருந்து யுஎல் 1710 விமானத்தினூடாக 291 பயணிகள் இலங்கை வந்துள்ளனர் மற்றும் மாலி 275 பயணிகள் மற்றும் அவுஸ்திரேலியா 50 பயணிகள் முறையே விமான இல யுஎல் 102, மற்றும் யுஎல் 607 ஆகிய விமானங்களினூடாக இன்று 21 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர் மற்றும் அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என ராஜகிரியவில் அமைந்துள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 21 ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோட்டல் டொல்பின்(13),சிட்ரஸ் வஸ்கடுவை (15),ஹோடல் புளூ வோட்டர் (34), செல்டன் ஹோட்டல் கொஸ்கொட(34),ஹோட்டல் ஈடன் காடன்(235), ரன்வி ஹோட்டல்(86) மற்றும் ஹோட்டல் அனர்வ (01) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 418 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 21 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இன்று 21 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15553 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் மையங்களில் 3756 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

காலை(மு.ப. 6.00) மணியளவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும் பதிவுசெய்யப்படவில்லை என இன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 26 தனிநபர்கள்,14 வெளிநாட்டை சேர்ந்த இலங்கையர்கள் மற்றும் 12 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.url clone | Men's Sneakers