Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2020 15:37:18 Hours

மேலும் இலங்கையர்கள் நாடு திரும்பி வரவுள்ளனர் கொவிட் மையம் தெரிவிப்பு

சென்னையிலிருந்து யூஎல் 1026 விமானத்தின் மூலம் 150 பயணிகளும், மும்பையிலிருந்து யூஎல் 1042 விமானத்தின் மூலம் 44 பயணிகளும் இலங்கையை வந்தடைந்தனர், லன்டனிலிருந்து யூஎல் 504 விமானத்தின் மூலம் 59 பயணிகள் 20 ஆம் திகதி இன்று இலங்கையை வரவுள்ளனர். இவர்கள் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக் கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் (20) ஆம் திகதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பம்பைமடு (72), ஹோட்டல் எடன் கார்டன் (235) மற்றும் ஹோட்டல் மவுண்ட் லிவினியா (28) ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 335 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் சுகாதார சான்றிதழ்களுடன் இன்று (20) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இன்று (20) ஆம் திகதி சனிக்கிழமை வரையான காலப் பகுதியில் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 15,411 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் முப்படையினரால் நிர்வாகித்து வரும் 42 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,634 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இன்று காலை (மு.ப. 6.00) வரையான காலப் பகுதியில் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு இலக்காகிய 03 நபர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு இந்திய நாட்டவர் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த இலங்கையர்கள் ஆவர்.

இதேபோல், 25 நபர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த 16 இலங்கையர்கள் மற்றும் 09 கடற்படையினர் பூரன குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று இன்றைய (20) ஆம் திகதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. affiliate link trace | Women's Designer Sneakers - Luxury Shopping