Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2020 10:34:22 Hours

மேலும் இலங்கையர்கள் நாடு திரும்பி வரவுள்ளனர் கோவிட் மையம் தெரிவிப்பு

ஜப்பானிலிருந்து யூஎல் 455 விமானத்தின் மூலம் 03 பயணிகளும், மெல்போனிலிருந்து யூஎல் 605 விமானத்தின் மூலம் 98 பயணிகளும், லன்டனிலிருந்து யூஎல் 504 விமானத்தின் மூலம் 04 பயணிகளும் வரவிருப்பதாகவும் இவர்கள் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைப்பதாக கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் அறிக்கையை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் இன்று காலை (19) ஆம் திகதி தெரிவித்தார்.

மேலும் பூசா நிபுனையிலிருந்து (12) பேரும், நந்திக்கடல் 59 ஆவது படைப் பிரிவில் (34) பேரும், முழங்காவிலிருந்து (82) பேரும், சிடிஎஸ் அம்பாறையிலிருந்து (11) பேரும், ப்ளு வாடரிலிருந்த ஒருவரும், சிட்ரஷ் வஷ்கடுவ (13) பேர் மொத்தமாக 153 பேர் தனிமைப்படுத்தலின் பின்பும் பிசிஆர் பரிசோதனைகளுடன் சுகாதார சான்றிதழ்களுடன் இன்று (19) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று வரையான காலப் பகுதியில் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 14,966 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் முப்படையினரால் நிர்வாகித்து வரும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,970 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை வரையான காலப் பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று நோய்க்கு இலக்காகிய 22 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 24 நபர்கள் பூரன குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 11 கடற்படையினர் உள்ளடங்குவார்கள் என்று இன்றைய 19 ஆம் திகதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Sports Shoes | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C