Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2020 19:34:47 Hours

கொவிட்-19 தடுப்பில் முன்னிறு சேவையாற்றியவர்களுகான ஆசீர்வாத பூஜை

புனித அனுராதபுர ருவன்வெலி மகா சாய வளாகத்தில் தெரண தொலைக்காட்சி ஏற்பாடு செய்த “தெரணாபிவந்தனா” பொசன் முழுமதி தின "கிருதவேதித்வயே பிங்கம" (நன்றியுணர்விற்கான ஆசீர்வாத பூஜை) போசன் பௌர்ணமி தின நிகழ்ச்சி இன்று 5 ம் திகதி மாலை நடைபெற்றது. நாட்டில் கொவிட் 19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து துறைகளினதும் விலைமதிப்பற்ற சேவைகளைப் நன்றி பாராட்டி நடாத்தப்பட்டது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னியராச்சி, பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜசிங்க, தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் பபா பலிஹவதன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இராணுவ சேவைகள் வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், பொது சுகாதார அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் ஆகியோரின் பங்கு பற்றலில் ஒரு மணி நேர ஆசீர்வாத பூஜை சாந்தி அறக்கட்டளையின் நிறுவுனர் அதி வணக்கத்திற்குறிய கலாநிதி கொடபொல அமரகித்தி தலைமை தேரரால் நடாத்தப்பட்டது.

வணக்கத்திற்குறிய கலாநிதி அமரகித்தி தலைமை தேரர் சுகாதாரத் துறை அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர், மருத்துவமனை தாதியர் மற்றும் சிற்றுழியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கொடிய வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் அயரது மற்றும் அர்ப்பணிப்புடன் தேசிய வகிப்பங்கை ஆற்றியமைக்கு நன்றி பாராட்டினார். அத்தோடு பங்களித்த அனைவருக்கும் சிறந்த நலன் நலன் வேண்டி ஆசீர்வாத பூஜையை நடாத்தினார்.

அன்றைய முழு போசன் தின நிகழ்ச்சியில் அதி வணக்கத்திற்குறிய கலாநிதி மெதகம அபயதிஸ்ஸ தலைமை தேரர், வணக்கத்திற்குறிய கலாநிதி பல்லேகம ஹேமரதன தலைமை தேரர் ருவன்வேலி மகா சாய தேரர்கள் மற்றும் சில முன்னணி தேரர்கள் கலந்து கொண்டனர். இங்கு சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.Sneakers Store | Womens Shoes Footwear & Shoes Online