Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2020 21:34:47 Hours

பொசன் தினத்தை முன்னிட்டு 'அமிசா' பூஜை நிகழ்வுகள்

பௌத்த மரபுகளை மதித்து சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளை கடைபிடித்து பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள பத்தரமுல்லை ஜயவர்தனபுர பகுதிகளில் இராணுவத்தினரால் பொசன் அலங்கார வர்ண கூடுகள் நிர்மானிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக இம் மாதம் 6 – 7 ஆம் திகதிகளில் முன்வைக்கப்பட்டன.

தற்போது நாட்டில் நிலவும் கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு இராணுவம் முகமளிக்கும் இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்திலுள்ள 24 படையணிகளால் நிர்மானிக்கப்பட்ட பொசன் அலங்கார கூடுகள் இராணுவ தலைமையக வளாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முன்வைக்கப்பட்டன.

இந்த அலங்கரிக்கப்பட்ட கூடுகள் இராணுவ தளபதி அவர்களினால் இம் மாதம் (3) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு அனைத்து கூடுகளும் இராணுவ இராணுவ தளபதி பார்வையிட்டு அங்கிருந்த படையிணர்களுடன் உறையாடலையும் மேற்கொண்டார்.

இந்த அலங்கார கூடுகளில் புத்த பெருமானின் ஜாதக கதைகள் உள்ளடக்கிய விடயங்கள் உள்ளடக்கியிருந்தன. இவைகளை இராணுவ தளபதி ரசித்து பார் வையிட்டு இதனை நிர்மானித்த படையினர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டார். Nike shoes | GOLF NIKE SHOES