Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2020 09:18:40 Hours

420 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர்

ஹோட்டல் புளூ வோட்டர்ஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் செயல்முறை நிறைவடைந்த இருவர் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று (05) தனிமைப்படுத்தல் சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறினார்.

இன்று வரை (05) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 11,709 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 04 ஜூன் 0600 மணி முதல் 05 ஜூன் 0600 வரை மேலும் 49 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய நாட்டைச் சேர்ந்த 03 பேரும், பங்களாதேஷசை சேர்ந்த இருவரும், டுபாய்யை சேர்ந்த ஒருவரும் 36 கடற்படையினரும் அடங்குவர். இன்று (04) வரை கடற்படையினர் மொத்தமாக 836 பேர் உறுதுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 420 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 416 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். Best Authentic Sneakers | Nike SB