Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 21:00:19 Hours

இராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் குழந்தை சிகிச்சைக்காக அனுமதி

ராஜகிரிய கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இன்று (2) பிற்பகல் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

நேற்று மாலை (1), இலங்கை விமானம் யுஎல் 1186 மூலம் கராச்சியில் இருந்து இலங்கை வந்தவரை சுய தனிமைப்படுத்துத்தலுக்கு சுகாதார அதிகாரிகளால் உட்படுத்தப்பட்டார்.

சிங்கபூரிலிருந்து மேலும் 291 பேர் (02) ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு இலங்கை விமானம் யுஎல் 303 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக முப் படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமை படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடற்படையால் நிர்வகிக்கப்படும் நிபுனா பூசா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 06 பேர் பி.சி.ஆர் சோதனையின் பின்னர் இன்று (02) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்றுவரை 02 ஆம் திகதி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மொத்தம் 11,614 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுதும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 4982 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அண்மையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரியின் துணைவியர் மற்றும் குழந்தை திங்களன்று (1) கொவிட் -19 வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 02 ஆம் திகதி 0600 வரை கடற்படை வீரர்கள் 758 பேர் கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர்களில் 411 பேர்கள் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர். 345 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Nike footwear | Nike for Men