Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 20:26:53 Hours

தொண்டர் படையணியின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜய அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 42 வது படைத் தளபதியாக இராணுவ சம்பிரதாய முறைகளின்படி 01 ஆம் திகதி கொஸ்கமை சீத்தாவாக்கை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவி ஏற்பு நிகழ்வில் கொமுனு ஹேவா படையணியின் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கேபி நுகேகொட அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, மூத்த அதிகாரி மத ஆசீர்வாதங்களுக்கு இடையில் பதவியேற்பிக்கான உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் தனது பதவியேற்பின் அடையாளமாக மாங்கன்று ஒன்றினை நாட்டி வைத்தார்

உயர் அதிகாரிகளுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி, முதன்மை பதவி நிலை அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தலைமையக கிளைகளின் பொறுப்பதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் விருந்தோம்பல் நிகழ்வில் இனிப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் படையினர் புதிய தளபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Running sneakers | Women's Nike Superrep