Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2020 11:14:32 Hours

பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவ நடைமுறைகளுக்கு அமைவாக மேஜர் ஜெனரல் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்ட ஐந்து சிரேஷ்ட அதிகாரிகள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை உத்தியோக பூர்வமாக 28 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து மேஜர் ஜெனரல்களின் அதிகாரத்தை வாளினை பெற்றுக்கொண்டனர்.

முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கமைய பிரிகேடியர் நிஹால் அமரசேகர, பிரிகேடியர் குமார சமரசிங்க, பிரிகேடியர் திலக் வீரகோன், பிரிகேடியர் நிஷாந்த ஹேராத் மற்றும் பிரிகேடியர் சுரேஷ் சலே ஆகியோரை 2020 மே மாதம் 22 ஆம் திகதி முதல் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களில் பதவி மேஜர் ஜெனரலாக உயர்வு பெற்ற சுரேஷ் சலேக்கு நிலைக்கான சின்னத்தை மற்றவர்களின் முன்னிலையில் அணிவித்து தனது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து ஐந்து மேஜர் ஜெனரலுக்கும் அடையாள வாள்களை வழங்கி வைத்தார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அவர்கள் இராணுவத்தின் இரு நட்சத்திர பதவியின் முக்கியத்துவத்தையும், அத்தகைய பதவியின் கட்டளைகள் மற்றும் நிர்வாக பண்பின் முக்கியத்துவம் இவ் உயர் நிலையின் கௌரவத்தையும் அவர்களுக்கு விரிவுரைத்தார்.இந்த நிலையின் அதிகாரத்தை வைத்திருக்கும் போது முன்மாதிரியான போற்றக் கூடிய நபராக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினார். உங்கள் அர்ப்பணிப்பு சேவை தொடர்ந்தும் இராணுவத்தின் பெருமையை உயர்த்த வேண்டும் என தளபதி கேட்டுக்கொண்டார். latest Nike release | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp