Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2020 15:38:24 Hours

கொவிட் 19 க்கு எதிரான தேசிய முன்னெடுப்புகளுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முன்னாள் படைவீர்களின் பங்களிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முன்னாள் படைவீர்களின் அமைப்பு இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிரான தேசிய முன்னெடுப்புக்களை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தின் கொவிட்-19 சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்மையில் லன்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினூடாக 1120 ஸ்ரேலிங் பௌன் (ரூபா 258,240.25) நிதியுதவியினை வழங்கியது.

குறித்த அமைப்பின் தலைவர் லெப்டினன் கொமாண்டர்(ஓய்வு) கபில டி அல்விஸ் மற்றும் பிரதி தலைவர்(ஓய்வு)மேஜர் செல்வநாயகம் சத்தநாதன் ஆகியோர் இணைந்து அமைப்பின் உறுப்பினர்களுக்கு பதிலாக லன்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலத்தில் சேவைபுரியும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கௌரவ திருமதி சரோஜா சிறிசேன அவர்களிடம் குறித்த அன்பளிப்பினை வழங்கினர். உயர்ஸ்தானிகராலத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் சுவர்ன போதொட அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov