11th May 2020 18:06:48 Hours
கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கீர்த்தி ரத்நாயக்க அவர்கள் ம் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு விடுத்த வேண்டுக்கோளின் பிரகாரம், 17 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் படையினரால், 6 நாட்களில் கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிப்பதற்காக வாட்டு இலக்கம் 36 ஐ முழுமையாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியமைத்து அதனை உத்தியோகபூர்வமாக வைத்திய பணிப்பாளரிடம் (10)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கையளித்தனர்.
இராணுவ தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா, 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை பணிப்பாளர் ஆகியோர்கள் அவசர வைத்தியசாலையின் தேசிய தேவையை கருத்திற்கொண்டு இந்த திட்டத்தை பூர்த்திசெய்தனர். அதன்படி 17 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர் புஞ்சிஹேவா அவர்கள் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார். jordan Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth