Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2020 16:00:35 Hours

தனியார் நன்கொடையாளர் & தர்மராஜ ஓபிஏ சங்கத்தினால் பாதுகாப்பு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு முக்கவசங்கள் அன்பளிப்பு

தற்பொழுது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட ஒரு தனியார் நிறுவனம், கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால், (ஓபிஏ), இப்போது கண்டி, மாடலே, நுவரெலியா மற்றும் பதுல்லை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் படையினர் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள் (பிபிஇ) மற்றும் பாதுகாப்பு முக்கவசங்கள் முதலியன அன்பளிப்பு செய்யப்பட்டன.

எஸ்கிமோ பேஷன் நிட்வேர் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள், 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களை 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளைமையகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (5) ஆம் திகதி சந்தித்து குறித்த உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர். இதேபோல், தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் புதன்கிழமை (6) 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளைமையகத்திற்கு சென்று படையினரின் பயன்பாட்டிற்காக முககவசங்கள் மற்றும் பாதுகாப்பு சீருடைகளை நன்கொடையாக வழங்கினர். இந்த பாதுகாப்பு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு முக்கவசங்கள் 11 பிரிவு தலைமையகத்திற்கு கீழ் உள்ள படைப்பிரிவுகள், பட்டாலியன்கள் மற்றும் பயிற்சி கல்லூரிகளில் விநியோகிக்கப்படும். short url link | New Balance 991 Footwear