Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2020 19:43:55 Hours

நொப்கோவின் புள்ளிவிபர அறிக்கை

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை(101), கண்டக்காடு(36), கட்டுகெலியாவை(31), கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் சம்பூர்(98),மற்றும் ஒலுவில்(20) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 286 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 8 ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர் என 8 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, 8 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 5728 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4931 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 8 ஆம் திகதியுடன் கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 390 ஆகும். அனேகமானோர் கடற்படை முகாமிற்கு உள்ளே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ( முகாமிற்குள் 308 மற்றும் முகாமிற்கு வெளியே 82)

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -5728

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4931

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 39 Best jordan Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C