Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2020 19:43:40 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி 68 ஆவது படைப் பிரிவின் பண்ணைக்கு விஜயம்

இராணுவ தலைமையகத்தின் துரு மித்துரு – நவ ரடக் எனுத் திட்டத்திற்கமைவாக, 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் நிர்வகிக்கப்படும் விவசாய பண்ணையை பார்வையிடுவதற்காக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் கடந்த தங்கட்கிழமை 4 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

அத்துடன் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களுடன் மேஜர் ஜெனரல் ஜயதிலக அவர்களும் 68 ஆவது பாகாப்பு படைப் பிரிவினருடன் இணைந்து வாழை கன்றுகள் மற்றும் மிளகாய் செடிகள் ஆகியவற்றை நட்டனர். தனது வருகையின் நினைவாக , முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி 68 பிரிவு படையினரின் அர்பணிப்பிற்காக காய்கறி விதைகளை பரிசாக வழங்கினார். Running Sneakers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth