Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2020 20:03:33 Hours

ஓய்வூதியம் பெறுவோருக்கு முப்படையினரால் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (5) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 210 பேர் லன்டனில் இருந்து நாலை 6 ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான யுஎல் 054 விமானத்தினூடாக இலங்கை வரவுள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படவுள்ளனர். பூனானை மற்றும் விமானப்படை வெலிசரை ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 47 பேர் பிசிஆர் பரிசோதனைகளின்பின்னர் இன்று 5 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு சென்றனர்.

5 ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 5089 பேர் தங்களுடைய வீடுகளுக்கு சென்றனர்.

பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் இருந்து இன்று காலை 5 ஆம் திகதி கோவிட்-19 தொற்றுக்குள்ளான ஒரு முச்சக்கர வண்டி சாரதி இனங்காணப்பட்டதனையடுத்து, அவருடன் தொடர்பினை பேணிய 29 நபர்கள் மற்றும் கொலன்னாவை பிரதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட மற்றுமொரு தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பினை பேணிய மேலும் 27 நபர்கள், மொடர கட்டிடத்தில் பிரதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட மற்றுமொரு தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பினை பேணிய மேலும் 15 நபர்கள் மற்றும் கண்டியில் உள்ள கொலம்பிஸ்ஸ பிரதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட மற்றுமொரு தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பினை பேணிய 18 குடும்பங்களை சேர்ந்த மேலும் 67 நபர்கள் உட்பட மொத்தமாக 138 பேர் இன்று காலை 5 ஆம் திகதி இராணுத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவும் உள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் மையங்களில் 4816 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 5 ஆம் திகதியுடன் கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 329 ஆகும்.

கடந்த மாதத்தினை போல், 645000 இற்கும் மேலதிகமான சிரேஷ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதியங்களை பெற்றுக் கொள்வதற்காக முப்படையினரால் போக்குவரத்து வசதிகள் செவ்வாய்கிழமை 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -5089

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4186

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 39

முழுமையான காணொளி பின்வருமாறு; Asics footwear | Nike Shoes