03rd May 2020 17:05:14 Hours
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 3 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
பேருவலை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்களுக்கு, இராணுவத்தினரால் உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் தனிமைப்படுத்தல் மையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களை வழியனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Nike Dunk - Collection - Sb-roscoff