Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2020 22:36:32 Hours

முப்படையினரின் சொந்த விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை ரத்து- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (26) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தியா கொயம்புத்தூரில் இருந்து இலங்கையைச் மாணவர்கள் அரச அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் உட்பட 133 பேர் இன்று (26) ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு வந்தடைந்தனர். இவர்களை முப்படையினரால் நிர்வாகிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர் .

அரசாங்கமானது எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காக சென்ற மாணவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கின்றது.

26 ஆம் திகதி வரையில் 4507 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்த பின்னர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை, நேற்றைய தினம் 25 ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் இருந்து வந்த 116 பேர் இராணுவம் மற்றும் கடற் படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது 33 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இன்று, 11 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 11 பேரில் ஒரு நோயாளி கண்டக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து இனங்காணப்படவர் மற்றைய விடுமுறைகளில் இருந்த 10 கடற் படையினர் வெலிசரை கடற்படை முகாமில் உள்ளவர்கள். அதன்பிரகாரம், விடுமுறைகளுக்கு சென்ற 27 கடற் படையினர் மற்றும் 68 பேர் வெலிசரை கடற் படை முகாமில் உள்ளவர்கள் உட்பட மொத்தமாக 95 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு கடற் படை அதிகாரி லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு வெலிசரை கடற் படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்தார். அவரின் பிரேத பரிசோதனையில் அவர் லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் இறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது இறுதிக் கிரிகைகள் இன்று நடைபெற்றது.

அதேவேளை,முப்படையினரின் சொந்த விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இன்று 26 ஆம் திகதியில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விடுமுறையிலுள்ள அனைவரும் முகாம்கள் மற்றும் படைத் தளங்களுக்கு வந்து அறிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு முப்படையினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும்.

பல பிசிஆர் பரிசோதனைகளானது வெலிசரை கடற்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்டன, அதன் பெறுபேறுகள் இன்று மாலை வியாகும் என எதிரபார்க்கப்படுகின்றன. அதேநேரம் சில வெலிசரை கடற்படையினருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள்சென்ற அனுராதபுரம் மற்றும் குருநாகல மாவட்ட பொது மக்கள் பெரிதும் அசௌகரியப்பட்டுள்ளனர்.

அதன்படி, இவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அல்லது தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்டுவர். அதேபோல் குறித்த தொற்றுக்குள்ளான கடற்படையினரின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மேலும் கண்காணிக்கப்படுவர் என்று லெப்டினன் சவேந்திர சில்வா தெரிவித்தார். காணொளியின் முழு விபரம் பின்வருமாறு Running sport media | adidas Yeezy Boost 350