25th April 2020 12:59:41 Hours
இராஜகிரியவிலுள்ள கோவிட்-19 தடுப்பு செயல்பாட்டு மையத்தில் (23) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன அவர்கள் இணைந்து கொண்டனர்.
இன்று (23) ஆம் திகதி இந்தியாவிலிருந்து விமானம் யுஎல் -1146 மூலம் கொண்டு வரப்பட்ட 101 மாணவர்களும் புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதே போல் எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபோருக்கு அரசினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கியிருந்த 16 நபர்கள் இவர்களது சுகாதார பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்பொழுது நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2744 பேர் தங்க வைக்கப்பட்டு பரசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் இது வரைக்கும் 4366 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பரிசோதனைகளின் பின்பு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கோவிட் – 19 பிசிஆர் பரிசோதனைகளின் போது பேருவனை பிரதேசத்திலிருந்து 13 பேரும், கெசல்வத்தையிலிருந்து 5 பேரும், கடுவலையிலிருந்து ஒருவரும் கண்டு பிடிக்கப்பட்டு ஜடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கடற்படை சிப்பாய் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியமையால் பொலன்னருவை லங்காபுர பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமமானது தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
இந்த ஊடக சந்திப்பின்போது பொலிஸ் மாஅதிபர் கருத்து தெரிவிக்கையில் நாடாளவியல் ரீதியாக 944 பொலிஸ் சாலைத் தடைகள் மற்றும் 262 மாவட்ட எல்லைத் தடைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் இன்று வரைக்கும் இலங்கை பூராக ஊரடங்கச் சட்டத்தை மீறிய 36,115 பேர் கைது செய்யப்பட்டதுடன், 10,000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
இதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. Nike sneakers | UK Trainer News & Releases