Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2020 18:32:19 Hours

திருமலையில் டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மனையாவளி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்ப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது எண்ணக்கருவிற்கமைய 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல மாரசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

இந்த டெங்கு ஒழிப்பு பணிகளின் போது 5 வீடுகள் டெங்கு தொற்றுக்கு உள்ளாகும் வகையிலான அறிகுறிகள் பிரகாரம் இணங்காணப்பட்டன. திருகோணமலை சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இந்த பணிகளில் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | 『アディダス』に分類された記事一覧